Monday, December 3, 2012

ஷமார்டின் லூதர் கிங்


ஷமார்டின் லூதர் கிங்

மெரிக்காவின் அடிமை முறையையும் நிற வேறுபாட்டையும் ஒழிப்பதற்கு முதன்முதலில் குரல் கொடுத்தவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஆகும். அதன் விளைவு ஒரு நாடாக நடிகனால் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் ஆபிரகாம் லிங்கனை தொடர்ந்து அமெரிக்காவில் நிலவி வந்த நிறவெறியை எதிர்த்து மீண்டும் ஒருவர் குரல் கொடுத்தார். அவரின் முடிவும் ஆரம்ப முடிவைப் போல் இருந்தாலும் அவரின் உரிமை போராட்டங்கள் இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படுகிறது. அமெரிக்க மக்கள் மத்தியில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்த போராட்ட வீரர் மார்டின் லூதர் கிங் ஆகும். அவர் கடந்த 1929 ஆம் ஆண்டு பிறந்தார். தனது இளமைக்காலம் முதல் சாதாரண பிரஜையாக வாழ்ந்த மார்டின் லூதர் கிங் கடந்த 1954 ஆம் ஆண்டில் அலபாமா எனும் ஊரில் கிறிஸ்தவ மத போதகரானார். அங்கு எளிய மக்களோடும் கறுப்பு இன மக்களோடும் பழகும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட மார்டின் லூதர் கிங் அந்த மக்கள் படும் இன்னல்களை பொறுக்க முடியாதவராக காணப்பட்டார். அப்போது அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கறுப்பு இன மக்கள் பொது இடங்களில் நடமாடக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் பேருந்துகளிலும் ரயில்களிலும் நீக்ரோ மக்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெள்ளையர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நீக்ரோக்களின் குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றை நீக்ரோக்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டது. மேலும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதோடு அவர்கள் அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இந்த கொடுமைகளிலிருந்து விடுபட நிக்ரோக்கள் ஒரு தலைவரை எதிர்பார்த்த சந்தர்ப்பத்தில் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அவர்களின் போராட்ட எழுச்சிக்கு மார்டின் லூதர் கிங் தலைமையேற்றார். ஒரு சந்தர்ப்பத்தில் கறுப்பு இன பெண்ணொருவர் பேருந்தில் வெள்ளையர்கள் அமரும் பகுதியில் தான் அமரப் போவதாகவும் தனக்கு சம உரிமை வேண்டுமெனவும் வாதிட்டார். எனவும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் அவர் கைதுசெய்து சிறைவைக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விடயத்தினை அறிந்துகொண்ட மார்டின் லூதர் கிங் கறுப்பு இன மக்களை திரட்டி எந்த பேருந்தும் செல்ல முடியாதளவிற்கு போராட்டத்தை ஆரம்பித்தார். இறுதியில் கறுப்பு இன மக்களை பேருநதிலிருந்து ஒதுக்கிவைக்கும் சட்டம் நீக்கப்பட்டது. இந்நிலையில் மார்டின் லூதர் கிங்கின் போராட்டம் அமெரிக்காவிலுள்ள பிற மாநிலங்களுக்கும் பரவியது. அதனைத் தொடர்ந்த கடந்த 1955 ஆம் ஆண்டு மார்டின் லூதர் கிங் சம உரிமை கேட்டு போராட்டத்தை ஆரம்பித்தார். அதற்கு அமெரிக்காவிலிருந்த அனைத்து கறுப்பு இன மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தனர். இந்தியாவின் மகாத்மா காந்தியின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட மார்டின் லூதர் கிங் தனது வன்முறையின்றிய அமைதியான வழிமுறைகளில் போராட்டங்களை நடாத்தி வந்தார். இந்நிலையில் உலகம் முழுவதும் மார்டின் லூதர் கிங்கின் புகழ் பரவியது. நிக்ரோ மக்களிடத்தில் அவரது செல்வாக்கும் அதிகரித்தது. அதனால் கறுப்பு இன மக்கள் மார்டின் லூதர் கிங்கை கறுப்பு இன மக்களின் காந்தி என அழைத்தனர். வெள்ளையர் மீது பகைமை பாராட்டமலும் கறுப்பு இன மக்களின் நியாயமான போராட்டங்களை விட்டுக்கொடுக்காமலும் மார்டின் லூதர் கிங் போராடினார். இந்நிலையில் அவரது சேவையினை பாராட்டி கடந்த 1964 ஆம் ஆண்டு மார்டின் லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் மாநாடு பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் என கறுப்பு இன மக்களின் விடிவிற்காக அயராது உழைத்தார். அதற்கமைய கடந்த 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மார்டின் லூதர் கிங் டென்சினி மாகாணத்திலுள்ள லொரேன் எனும் ஹோட்டலில் மேல்மாடியிலிருந்து பொதுக்கூட்டமொன்றில் உரையாடிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவின் நிறவெறியை எதிர்த்து போராடிய இவரின் போராட்டம் பல இடங்களில் வெற்றிபெற்று இன்று அமெரிக்காவின் நிறவெறி முற்றாக ஒழிக்கப்பட்டமைக்கு காரணமானவர் ஆனார். இந்நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் குறித்த ஹோட்டல் அறையில் இதுவரை யாரும் தங்கவில்லை. அதற்கைமைய அவர் தங்கிய்306 ஆம் இலக்க அறையை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டதோடு குறித்த ஹோட்டல் அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. உலகில் நிறவெறியை எதிர்த்து போராடிய நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன் மற்றும் மார்டின் லூதர் கிங் ஆகியோர் இன்றும் கறுப்பு இன மக்களின் கடவுள்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றர். மார்டின் லூதர் கிங் மறைந்தாலும் அவர் கறுப்பு இன மக்களுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் உரிமைகள் இன்றும் அவரை நினைவுகூறும் இன்றும் அமெரிக்கா கறுப்பு இன வெள்ளையர் பாகுபாடின்றி உலகின் தலைசிறந்த நாடாக அமைவதற்கும் வழிவகுத்த மார்டின் லூதர் கிங் உலகில் இணையற்ற தலைவர்களில் ஒருவர். .............................................................................................................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi