Monday, December 3, 2012

தாஜ்மஹால்


தாஜ்மஹால்.   11.11.2012

காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தாத மனிதன் இல்லை. ஓவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காதல் வயப்பட்டுள்ளான். ஆனால் காதலுக்குள் செல்லதவர்களையும் வசப்படுத்திய உலகின் பிரமாண்ட சின்னம் காதல் என்பதை அடையாளப்படுத்துவதற்கு இரண்டு சின்னங்கள் உண்டு. ஒன்று மனித இதயம் மற்றொன்று காதலின் நினைவுச் சின்னமாக உண்மையான காதலை பரிணமித்து நிற்கும் தாஜ்மஹால். இந்தியாவின் உத்ரபிரதேஸ் மாநிலத்தில் ஆக்ரா எனும் இடத்தில் காதலின் சின்னமான தாஜ்மஹால் அமைக்கப்பட்டது. தாஜ்மஹால் இன்றைக்கு 350 வருட வரலாற்றைக்கொண்ட பலமும் செல்வ செழிப்பும் கொண்ட முஹல சாம்ராஜ்சியத்தின் வரலாற்றை பின்னணியாக கொண்டதாகும். முஹல சாம்ராஜ்சியத்தின் பேரரசனான தனது காதலியும் மனைவியும் அரசியுமான மும்தாஜ் மகாலின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டதே தாஜ்மஹாலாகும். கடந்த 631  ம் ஆண்டு ஜூன் மாதம் 7 ம் திகதி சாஜஹானின் மனைவியான மும்தாஜ் மஹால் தனது 13 வது பிரவசத்தின் போது உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் தற்சிணப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் புதைக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் மும்தாஜ் மஹாலின் உடல் தற்போது தாஜ்மஹால் அமைக்கப்பட்டிருக்கும் பிரதேசத்திற்கு எடுத்து வரப்பட்டு எமுனை நதிக்கரையில் புதைக்கப்பட்டது. அதனையடுத்து தனது மனைவிக்காக பிரமாண்டமான கல்லறையொன்றை அமைக்க திட்டமிட்ட மன்னன் சாஜஹானின் சிந்தையில் தோன்றிய கற்பனை சின்னமே தாஜ்மஹாலாகும். அதற்கமைய முஹலாய பேரரசரான சாஜஹானால் கடந்த 1631 ம் ஆண்டு தாஜ்மஹாலுக்கான கட்டுமான பணிகள் ஆரம்பமானது. யமுனை நதிக்கரையில் 42 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் அரிதான வெள்ளை பளிங்கு கற்களை கொண்டு தாஜ்மஹால் அமைக்கப்பட்டது. தாஜ்மஹாலானது கடந்த 1631 ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து கடந்த 1651 ம் ஆண்டு அதாவது 22 வருட காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டுமானத்தின்போது அதிநுட்பமுடைய சுமைக்காவிகள், பொறிகள் மற்றும் 22 ஆயிரம் வேலையாட்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் பல நிபுணர்கள் இரவு பகலாக பயன்படுத்தப்பட்டு தாஜ் மஹால் அமைக்கப்பட்டது. தாஜ்மஹால் கட்டித்தின் அடித்தளம் 186 அடி சதுரமான நிலப்பரப்பிலும் நிலத்திலிருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும் ஏனைய 4 கோபுரங்களும் நூற்று 37 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டது. கோபுரங்களானது தாஜ்மஹால் கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் சரிந்த வண்ணமே கட்டப்பட்டுள்ளமை சில அசம்பாவிதங்கள் ஏற்படும்பட்சத்தில் தாஜ்மஹாலை கோபுரங்கள் பாதிக்காக வகையில் கட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாங்கிகள் இன்றி அமைக்கப்பட்டுள்ள குறித்த கோபுரம் 13 ஆயிரம் டொன் அதாவது 2 ஆயிரம் யானைகளின் எடைக்கு சமனாக காணப்படுகிறது. இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புடன் சமச்சீரான அமைப்பில் தாஜ்மஹால் அமைக்கப்பட்டுள்ளது. அதனைச்சூழ அமைக்கப்பட்டுள்ள நீர் நிலைகளில் தாஜ்மகாலின் நிழல் கறுப்பு நிறமாக தோன்றுவதும் அப+ர்வ காட்சியாகும். இதேவேளை தாஜ்மஹாலின் வெளிப்புற கதவுகள் மற்றும் சுவர்களில் பதிப்பெதற்கென ரஷ்யா, திபெத், பாரசீகம் ஆகிய இடங்களிலிருந்து வைரம், வைடூரியம், முத்து, பவளம் ஆகியன வரவழைக்கப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளன.  தாஜ்மஹாலுக்கான திட்ட வரைவானது ஆரம்பத்திலிருந்தே எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல் அமைக்கப்பட்டமை அதன் சிறப்பம்சமாகும். மேலும் தாஜ்மஹாலின் முகப்பில் புனித குர்ஆனின் வசனங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. குறித்த வசனத்தை பொறித்த பாரசீக கலைஞரான அமானகானின் பெயர் மாத்திரமே தாஜ்மஹாலின் ஒரு சுவரில் எழுதப்பட்டுள்ளது. அதில் மன்னரின் பெயரோ குர்ஆனைத் தவிர வேறு எந்த மொழிகளோ அதில் எழுதப்படவில்லை. இந்நிலையில் மும்தாஜின் கல்லறையானது பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதோடு அதனை சூழ சதுர வடிவிலான தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லறை மண்டபத்திற்கு இடது மற்றும் வலது புறங்களில் சிவப்பு நிறத்திலான மசூதி மற்றும் அதற்கு இணையான மற்றுமொரு கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறான வரலாற்று சாதனை கொண்ட தாஜ்மஹாலின் பின்புலக்கதைகள் சற்று வியப்புக்குள்ளானதாகவே காணப்படுகிறது. அதாவது தாஜ்மஹால் கட்டிப்பணிகள் நிறைவு பெற்றதும் அங்கு வேலை செய்த அனைவரதும் கைகள் வெட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. தாஜ்மஹாலைப்போன்ற ஓர் நினைவாலயம் வேறொருவரால் கட்டப்படுவதை தடுப்பதற்காக சாஜஹான் குறித்த கட்டளையை விடுத்ததாக வரலாற்று செய்திகள் குறிப்பிடுகின்றன. யமுனை நதிக்கரையோரத்தில் முஹலாய சாம்ராஜ்சியத்தின் செல்வ செழிப்பினையும் அன்றைய காலகட்ட கட்டிட நிர்மாண துறையினையும் அன்பின் பெறுமதியினையும் வெளிப்படுத்தி தாஜ்மஹால் ஜொலித்து நிற்கிறது. அதற்கமைய கடந்த 1983 ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கவ்வி, விஞ்ஞான, கலாசார மையமான யுனஸ்கோ, தாஜ்மஹாலை உலக கலாசார சின்னமாக அறிவித்தது.  பல நுணுக்கமான கட்டிட கலையாலும் உலகில் எப்பகுதியிலும் இல்லாத திட்ட வரைபிலும் அமைக்கப்பட்டுள்ள காதலின் சின்னமான தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைக் காண்பதற்கு ஆண்டுதோறும் 3 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வருகைதருகின்றனர். இதேவேளை தாஜ்மஹாலின் மூடப்பட்டுள்ள பல கதவுகள் திறக்கப்படும் போது தாஜ்மஹால் தொடர்பாகவும் முஹலாய சாம்ராஜ்சியத்தின் வரலாறு தொடர்பாகவும் பல விடயங்கள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப்போல ஓர் இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப்போவதில்லை மும்தாஜ் எனும் அழகிய மனைவி மீது சாஜஹான் வைத்திருந்த காதலின் கலை வடிவமே தாஜ்மஹாலாகும். காதல் என்ற 3 எழுத்து சொல்லுக்கு முக்காலமும் சாட்சி கூறும் வகையில் கண்ணீரில் எழுதப்பட்ட காவியத்தின் அடையாளம் தாஜ்மஹால். ......................................................................................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi