Sunday, December 2, 2012

ஜே ஆர் ஜயவர்தன


ஜே ஆர் ஜயவர்தன (04.11.2012)

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மறக்க முடியாத நினைவலைகளையும், சேவையினையும் செய்து மக்கள் மனதில் இடம்பிடித்து உயிர்துறந்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் தனித்துவமான சில தலைவர்களும் இலங்கை திருநாட்டை ஆட்சி செய்துள்ளனர். அதற்கமைய இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், 2ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்;ட ஜனாதிபதியாகவும் பதவிவகித்து , நாட்டின் அரசியல் திருத்தங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தவர் மறைந்த முன்னாள்  ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்தன ஆகும். இவர் கடந்த 1906 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ம் திகதி , இலங்கையின் புகழ்பெற்ற நீதிபதிகளில் ஒருவரான எஜினே விலப்ரட் ஜயவர்தனவிற்கு, மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜீனியர்ஸ் ரிச்சட் ஜயவர்தன என்பதாகும். தனது இளமைக்கால கல்வியினை  கொழும்பு ரோயல் கல்லூரியில் மேற்கொண்ட ஜே ஆர் ஜயவர்தன, பாடசாலையில் கல்விகற்கும்போது, விளையாட்டிலும், கல்வியிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கிய மாணவராக காணப்பட்டார். அதன் காரணமாக இவர், கொழும்பு ரோயல் கல்லூரியின் பல துறைகளில் தனது திறமையினை வெளிக்காட்டி , பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மாணவராக காணப்பட்டார். இந்நிலையில் தனது ஆரம்பகல்வியினை சிறந்தமுறையில் மேற்கொண்ட ஜே ஆர் ஜயவர்தன, கடந்த 1928 ம் ஆண்டு, கொழும்பு, சட்டக்கல்லூரியில் இணைந்து கல்வி கற்று, வழக்கறிஞராக தனது சேவையினை ஆரம்பித்தார். மேலும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றிய அவர் பௌத்த மதத்திற்கு மாறினார். இந்நிலையில் தனது சமூகநல எதிர்பார்புகள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர், கடந்த 1938 ம் ஆண்டு, இலங்கை தேசிய காங்கிரசில் இணைந்துகொண்டார். பின்னர் அதில் கடந்த 1940 ம் ஆண்டு செயலாளராக பொறுப்பேற்ற ஜே ஆர் ஜயவர்தன, கடந்த 1943 ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத்தேர்தலில் களனி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். அதற்கமைய கடந்த 1946 ம் ஆண்டு, இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது அமைச்சரவையில் ஜே ஆர் ஜயவர்தன, நிதியமைச்சராக பதவிவகித்தார். பின்னர் தனது திறமையான வழிநடத்தல்கள்  மற்றும் அரசியல் நகர்வுகள் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான உறுப்பினராக ஜே ஆர் ஜயவர்தன, காணப்பட்டார். இதேவேளை இலங்கையின் முதலாவது பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபக தலைவரும் டீ எஸ் சேனாநாயக்கவின் அமைச்சரவையில் இளமையான அமைச்சர் என்ற அந்தஸ்துடன் ஜே ஆர் ஜயவர்தன தனது அமைச்சு பணியை முன்னெடுத்தார். பின்னர் கடந்த 1950 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் பல்வேறு அழுத்தங்களை சந்தித்து அரசியலில் பல பிரச்சினைகளை சந்தித்தது. குறித்த நிலையின் போது, ஐக்கிய தேசிய கட்சியினை சிறந்த முறையில் வழிநடத்தி, பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதில் இவர் பெரும் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த 1977 ம் ஆண்டு நடைபெற்ற  ஜனாதிபதி;தேர்தலில் அப்போதைய பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை தோற்கடித்து, வெற்றிபெற்ற ஜே ஆர் ஜயவர்தன,   நாட்டின் 7 ஆவது பிரதமராக பதவியேற்றார். அதற்கமைய 1977 ம் ஆண்டு ஜீலை மாதம் 23 ம் முதல் , கடந்த 1978 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 4 ம் திகதி வரை இலங்கை நாட்டின் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் இலங்கை நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக செயற்பட்ட சேர் வில்லியம் கோப்பல்லாவவின் பதவிக்காலம் நிறைவடைய ,  நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜே ஆர் ஜயவர்தன, பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில், ஜனாதிபதி  தேர்தலில் வெற்றிபெற்று, இலங்கை நாட்டி; 2 ஆவது  ஜனாதிபதியாhக தெரிவானார். அதற்கமைய தனது சிறந்த அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்த அவர் , அனைவராலும் வரவேற்கப்பட்ட தலைவராகவும், அனைத்தின மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும் தனது சேவையினை தொடர்ந்தார்.  இந்நிலையில்  அவர் ,  கடந்த  1978 ம் ஆண்டு அவரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சீர்திருத்தத்திற்கமைய இலங்கை நாட்டிலிருந்த பிரதமர ஆட்சிக்கும் மேலதிகமாக நிறை வேற்று அதிகாரம் கொண்ட pனாதபதி முறைமையினை அறிமுகப்படுத்தினார். அதற்கமைய அவர் கடந்த 1978 ம் ஆண்டு,  செப்டெம்பர் மாதம் 7 ம் திகதி முதல் , கடந்த 1989 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 2 ம் திகதி வரை இலங்கை நாட்டி; நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக செயற்பட்டார். மேலும் சுதந்திர இலங்கையின் தலைநகரான ஸ்ரீpஜயவர்தன புர கோட்டையை மாற்றியமைத்த பெருமையும் இவரையோ சாரும். தற்போது இலங்கை நாட்டில் காணப்படும்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி முறைமைக்கு அடித்தளமிட்டவரும் இவராவார்.  அதன் பின்னர் இலங்கையில் பதவியேற்ற ஒவ்வொரு ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகவே பதவியேற்றனர். இவர் , கடந்த 1989 ம் ஆண்டு தனது அரசியல் வாழ்விலிருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் கடந்த 1935 ம் ஆண்டு எலீனா பண்டார ரூபசிங்க என்பவரை திருமணம் முடித்தார்.  அவர்களுக்கு ரவீந்திர  விமல் ஜயவர்தன எனும்   ஒரு மகனும் காணப்பட்டார்.  அவர் இலங்கை இராணவத்திலும் சேவையாற்றினார். இவ்வாறு இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டு மக்களுக்கான நலன்திட்டங்களை கொண்டுவந்து, சிங்க இதயம் படைத்த தலைவன் என்ற பெயரையும் சர்வதேசத்திற்கு மத்தியில் ஜே ஆர் ஜயவர்தன பெற்றுக்கொண்டார்.  இவரின் ஓய்வினை தொடர்ந்து,  நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாச வெறறிபெற்று, ஜனாதிபதியாக தெரிவாகியமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறு  நாட்டிற்காக பல சேவைகளை செய்து, மறக்க முடியாத தலைவராக திகழ்ந்த ஜே ஆர் ஜயவர்தன கடந்த 1996 ம் ஆண்டு, நவம்பர் மாதம் முதலாம் திகதி , தனது 90 ஆவது வயதில் உயிர்நீத்தார். வரலாற்றில் இலங்கை நாட்டை வலுப்படுத்தி சர்வதேசமெங்கும் .நாடு தொடர்பான எண்ணக்கருவை  உயர்வடைய செய்து நாட்டை உயர்ந்தநிலைக்கு கொண்டுசென்ற தலைவர்களில்  ஜே ஆர் ஜயவர்தனவின் பங்கு அளப்பரியது அவர் இறந்தாலும் இன்றும் அவரின ;எண்ண அலைகள் ,  இலங்கை வாழ் மக்களின் இதயங்களில்…....பிரசன்னா

No comments:

Post a Comment

hi